வவுனியா, நேரியகுளம் வீதி, விநாயகர் புரத்தில் இடம்பெற்ற விபத்தில் 60 வயது மதிக்க தக்க ஆண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். நெற்றி பகுதி நிலத்தில் மோதுண்டு உடைந்தமையினால் இறப்பு நிகழ்ந்துள்ளது.
மோட்டார் சைக்கிள் இரண்டு நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இறந்த நபர் மோட்டார் சைக்கிளை கட்டுப்பாடின்றி ஓட்டி வந்ததாக சம்பவத்தை நேரில் பார்தவர்கள்தெரிவிக்கின்றனர். அத்தோடு மது போதையில் பயணித்துள்ளார் என்ற சந்தேகமும் நிலவுகிறது.
மற்றைய மோட்டார் சைக்கிளில் இரு பெண்கள் பயணித்துள்ளனர். மோட்டார் சைக்கிளினை ஒட்டிய பெண்ணுக்கு கையில் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது.

