விலையேற்றங்கள்- பெற்றோலிய கூட்டுத்தாபனம் விலையை ஏற்றியது

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இறுதியில் எரிபொருள் விலையினை ஏற்றியது. 92 ஆம் ரக பெற்றோலின் 77 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, 254 ரூபவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 95 ஆம் ரக பெற்றோல் 75 ரூபாவினால் அதிரிக்கப்பட்டு 83 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது. ஓட்டோ டீசல் 55 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 176 ரூபாவாகும், சுப்பர் டீசல் 95 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 254 ரூபாவாக விற்பனை செய்யப்பபடவுள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலையினை அதிகரிப்பதில்லை என வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே மற்றும் அரசாங்கம் அதிகரிப்பதில்லை என்ற முடிவிலிருந்து விலகி விலையேற்றத்தினை மேற்கொண்டுள்ளது.

நேற்று முதல் பல பொருட்கள் விலையேற்றப்பட்டுள்ளன. அந்த வகையிலே கோதுமை மா 1 Kg 35 ரூபாவினால் உயர்த்தப்பட்டது. அதனை தொடர்ந்து 1 ராத்தல் பாணின் விலை 30 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்தோடு பேக்கரி தயாரிப்புகள் யாவும் 10 ரூபாவினால் அதிகரிப்படவுள்ளதாகபேக்கரி தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

டொலர்விலை அதிகரிப்பு, பெற்றோல் விலை அதிகரிப்பு போன்ற காரணங்களினால் இந்த விலையேற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

சாப்பாட்டு பாசல்கள் 30 ரூபாவினால் விலையேற்றப்படவுள்ளதாக கன்டீன் உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. உணவு பாசல் மற்றும் கொத்து ஆகியனவே இவ்வாறு விலை உயர்த்தபப்டுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எரிவாயு தட்டுப்பாடு மற்றும் டொலர் விலையேற்றம் என்பன விலை அதிகரிப்புக்கு காரணமென இந்த சங்கம் தெரிவித்துள்ளது.

விமான டிக்கெட்டுகளுக்கான விலையினை 27 சதவீதத்தினால் அதிகரிப்பதாக சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை அறிவித்திருந்தது. அவர்களும் டொலர் விலையற்றத்தையே காரணமாக காட்டியுள்ளனர்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை ஏற்றினால் போக்குவரத்து கட்டணங்களை 50 சதவீதத்தால் உயர்த்தவுள்ளதாக தனியார் போக்குவரத்து சங்கம் நேற்று அறிவித்திருந்த நிலையில் போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிக்கும் நிலையம் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்த்தும் பொருட்கள் விலையேறும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தினமும் பொருட்களின் விலையேற்ற அறிவிப்புகளை கேட்டு மக்கள் மனவளவில் பாதிப்படைந்து வருகின்றனர். விரக்தியோடோடு அடுத்தது எந்த பொருள் விலையேற்றம் என எதிர்பார்த்துக்கொண்டுள்ளனர்.

விலையேற்றங்கள்- பெற்றோலிய கூட்டுத்தாபனம் விலையை  ஏற்றியது

Social Share

Leave a Reply