வவுனியாவிற்கு மேலும் 18,500 சினோபார்ம் தடுப்பூசிகள் நாளை வந்தடையவுள்ளதாக வவுனியா மாவட்ட தொற்றியலாளர் வைத்திய கலாநிதி செ.லவன் தெரிவித்துள்ளார். இதில் 12,000 ஊசிகள் 20-30 வயதினருக்கானது எனவும், 20-30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு முதற்கட்டமாக விரைவில் அவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
வவுனியாவில் மிகவும் நேர்த்தியாக தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. 60 சதவீதமளவில் இரண்டு ஊசிகளையும் மக்கள் பெற்றுளளனர். இந்த நிலையில் 20-30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஊசிகள் ஏற்றும் பணிகள் வவுனியாவில் ஆரம்பிக்கவுள்ளன.
ஏற்கனவே தடுப்பூசிகள் போட்டது போன்றே 20-30 வயது பிரிவினருக்கும் ஊசிகள் ஏற்றப்படவுள்ளன. இருப்பினும் எப்போது, எங்கே ஊசிகள் ஏற்றப்படும் போன்ற முழுமையான விபரங்களை சுகாதர துறையினர் விரைவில் அறிவிப்பார்கள்.