கொரோனா தனிமைப்படுத்தல் ஊரடங்கு 01 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருக்கும் நிலையில் வவுனியாவில் அதிகரித்துள்ள மக்கள் நடமாட்டம் தொடர்பிலும், கடைகளில் வியாபாரம் நடைபெறுவது தொடர்பிலும் அரச உயர் அதிகாரிகள் பேசி வருவதாக அறியமுடிகிறது.
வவுனியாவில் தொற்றுக்கள் மற்றும் இறப்புக்கள் மோசமாக பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தினால் மட்டுமே தொற்றை குறைக்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
அதனடிப்படையில், மாவட்ட செயலகம், பிரதேச செயலகம், கிராம சேவகர்கள், சுகாதர துறை, உள்ளூராட்சி சபைகள், பொலிஸ், இராணுவம் ஆகியன இது தொடர்பான கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாகவும், அறியமுடிகிறது.
மதுபான கடைகள் திறக்கலாம் என்ற அறிவிப்பும் வந்திருக்கும் நிலையில் மேலும் மக்கள் நடமாட்டம் அதிகரித்தல் மற்றும் மதுபான கடைகளில் மக்கள் கூட்டம் கூடுவதை தடுத்தல் போன்ற திட்டங்களையும் செயற்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எவ்வாறு அதிகாரிகள் செயற்படபோகின்றனர் என்பதும், மக்கள் எவ்வாறு செயற்படப்போகின்றனர் என்பதையும் பொறுத்திருந்தே பார்க்கமுடியும்.
