காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு ஒரு இலட்சம் ரூபா நட்ட ஈடாக வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நீதியமைச்சர் அலி சப்ரி அமைச்சரவையில் முன்வைத்த திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
காணமல் ஆக்கப்பட்டோர் அலுவகலகத்தின் விபரங்களினடிப்படையில் பதிவாளர் நாயகம் வழங்கும் சான்றிதழை வைத்திருப்பவருக்கு குறித்த பணப் பெறுமதி வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நட்ட ஈட்டு தொகையின் மூலம் காணாமல் ஆக்கப்பட்ட நபரின் உறவினரது அல்லது குடும்பத்தினரது வாழ்வாதாரத்தை உயர்த்த இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அல்லது குடும்பத்தவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், உதவவும் உதவி வழங்குதல் என்ற அரசாங்கத்தின் அறிக்கைக்கு அமைய இந்த திட்டம் அமுல் செய்யப்படவுள்ள்து.
காணாமலாக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம், சரத்து 17, 2016 இற்கு அமைவாக விசாரணைகளை மேற்கொண்டு காணாமலாக்கப்பட்டுள்ளவர் தொடர்பில் இறந்துள்ளாரா அல்லது காணமலாக்கப்பட்டுள்ளாரா என்பதற்கான சான்றிதழினை வழங்குகிறது.
