டொலரின் விலை இன்று மேலும் அதிகரித்துள்ளது. வங்கிகள் இன்று 275 ரூபாவுக்கு டொலரை விற்பனை செய்ததாக அறிய முடிகிறது. அவர்களது டொலர் பெறுமதி 285 ரூபாவகவும் காணப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பணபுரள்வினை சுழற்சியடைய செய்யுமாறு வங்கிகளுக்கு மத்திய வங்கி அறிவுறுத்தியமைக்கு அமைவாக இந்த விலைக்கு டொலர் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மத்திய வங்கி இந்த அறிவிப்பினை வழங்கிய போது டொலருக்கான விலை 230 ரூபவாக அறிவித்தது. பின்னர் 259 ரூபாவாக அறிவித்திருந்தது.
இந்த நிலையில் வங்கிகளது இந்த அதிகரிப்பானது டொலர் பெறுமதி மேலும் அதிகரிக்குமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
