அரச எதிர்ப்பு போராட்டம் – பாரிய மக்கள் கூட்டம்

தேசிய மக்கள் சக்தி (மக்கள் விடுதலை முன்னணி) ஏற்பாடு செய்திருந்த அரச எதிர்ப்பு போராட்டம் இன்று கொழும்பு நுகேகொடையில் நடைபெற்றது. இன்று(23.03) பிற்பகல் 3.00 மணிக்கு டெல்கந்தையில் ஆரம்பித்த பேரணி, மாலை வேளையில் நுகேகொடையில் நிறைவடைந்தது.

இந்த பேரணியின் நிறைவில் உரையாற்றிய தேசிய மக்கள் சக்தியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்கே இன்றைய ஜனாதிபதியின் சர்வ கட்சி மாநாடு தொடர்பில் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார்.

“இந்த நாட்டை முன்னேற்ற கலந்துரையாடல் நடைபெற்றது. அங்கு நடைபெற்ற கூட்டத்திலிருத்துவர்கள் – மக்களின் பணத்தை கோடி கணக்கில் கொள்ளையிட்டு, இன்னமும் 7 , 8 வழக்குகளிலுள்ள பசில் ராஜபக்ஷ. நாட்டு மக்களின் பணத்தை நாசமாக்கி, மத்திய வங்கியின் கோடி கணக்கில் கொள்ளையிட்டவர்களை பாதுகாத்த ரணில் விக்ரமசிங்க. மறுபக்கத்தில் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் மூலம் தப்பித்துக் கொண்ட, அல்லது நிறைவேற்று அதிகாரத்தினால் நன்மை பெற்ற, நிறைவேற்றதிகாரத்தினால் வழக்கு வைக்கப்பட்ட, 35 வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்ட ஜனாதிபதி. தற்போதைய ஜனாதிபதி, ஜனாதிபதியாவதற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதிக்கு “வெருளி” என கூறினார். பிறகு “ஹிட்டான்” என கூறினார். பின்னர் “வுட்டான்” என கூறினார். கடையிசையில் அவருக்கு தொப்பி. அவரும் மேடைக்கு வந்திருந்தார்” என இன்றைய மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் தொடர்பில் விமர்சன கருத்துக்களை முன் வைத்திருந்தார்அனுர குமார.

அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து மிக கடுமையான விமர்சனங்களை அனுர குமார முன்வைத்திருந்தார்.

அரச எதிர்ப்பு போராட்டம் - பாரிய மக்கள் கூட்டம்

Social Share

Leave a Reply