இ.தொ.கா பதவிகளுக்கு துணை போகாது – ஜீவன்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எப்போதும் அமைச்சு பதவிற்கு துணைபோவது கிடையாதென தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொள்ளாமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே ஜீவன் தொண்டமான் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
.
ஒரு வருஷமாக மக்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். அவை தொடர்பில் சட்ட ரீதியில் நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். அமைச்சர்களிடம் பேசியுள்ளோம். ஜனாதிபதியிடம் கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். தீர்வு வருமென கூறியுள்ள போதும் தீர்வு வரவில்லை.

பாராளுமன்ற குழு கூட்டம், கட்சி தலைவர்களின் கூட்டமென பல கூட்டங்களில் மக்களின் பிரச்சினைகளை கூறிவிட்டோம். ஆனால் தீர்வு வராத நிலையில் மீண்டும் இந்த கூட்டத்திலும் போய் இந்த பிரச்சினைகளை பேசிக்கொண்டு இருக்க மீடியாது. ஆகவே இந்த சர்வகட்சி மாட்டில் கலந்து கொள்ளவில்லையென தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மேலும் தெரிவித்துள்ளார்.

அமைச்சு பதவிகளை பேரம் பேசுவதற்கு நாம் இந்த கூட்டத்துக்கு போகவில்லையென எதிர்க்கட்ச்சியினர் கூறி வருகின்றனர். அமைச்சு பதவிகளுக்காக இ.தொ.கா அரசாங்கத்தோடு இருக்கவில்லை. ஆளும் கட்சியில் இருந்தாலும், எதிர்க்கட்சியில் இருந்தாலும் நாங்கள் மக்களின் பிரசிச்சினைகளை பேசுவோம் என மேலும் ஜீவன் தன்னுடைய கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

பெருந்தோட்ட மக்கள் பொருளாதார ரீதியாகவும் ஏனைய அனைத்து விடயங்களுக்கும் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கிவருகின்றனர். மலையக மக்கள் எதிர்கொள்ளும் சகல பிரச்சினைகளுக்கும் ஒரு காத்திரமான தீர்வு எட்டப்படவேன்டும் என்பதே எமது நோக்கமாகும் என மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply