ராஜபக்ஷ அணிக்கெதிரானவர்களோடு கை கோர்ப்போம்-சம்பிக்க

தற்போதைய அரசுக்கு எதிராக செயற்படுபவர்களோடு 43 ஆம் படையணி இணைந்து செயற்பட தயாராகவுள்ளதாக அதன் தலைவர் பாட்ளி சம்பிக்க இரணவக்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து இந்த அரசுக்கு எதிராக செயற்படுவர்களுடனும் இணைந்த செயற்பட தயார் என அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியோடும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள்ளும் ராஜபக்ஷக்களுக்கு எதிராக செயற்படுவார்களோடு இணைந்து செயற்பட தாம் தயாராக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க இரணவக்க மேலும் கூறியுள்ளார்.

“தற்போதைய ஆட்சியாளர்களை ஆட்சியில் இருந்து தூக்கி எறிய மகா கூட்டணி அமைக்க வேண்டியது காலத்தின் தேவை. அதனால் புதிய மகா கூட்டணியை உருவாக்குவதற்கு எந்தக் கட்சியுடனும் இணைந்து செயற்பட நாங்கள் தயாராக உள்ளோம்” எனவும் ரணவக்க தெரிவித்துள்ளார்.

43 ஆம் படையணியின் மாநாட்டில் அழைப்பிதழை ஏற்றுக் கொண்டு ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைர் மற்றும் தேசிய அமைப்பாளர் கலந்து கொண்டார். அதற்காகவே ஐக்கிய தேசிய கட்சியின் சத்தியாகிரக போராட்டத்தில் கலந்துகொண்டதாக சம்பிக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியோடு ஏற்கனவே கூட்டணி அமைத்து சம்பிக்க இரணவக்க செயற்பட்டாலும், சஜித் பிரேமதாசவுடன் நல்லுறவில்லையென அரசியல் வட்டாரங்களுக்குள் பேச்சு அடிபட்டு வருகின்றது.

ராஜபக்ஷ அணிக்கெதிரானவர்களோடு கை கோர்ப்போம்-சம்பிக்க

Social Share

Leave a Reply