ஒரு முட்டையின் விலை 50 ரூபாவாக உயர்வடையும் சாத்தியங்கள் காணப்படுவதாகச் சந்தை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் முட்டை உற்பத்தியானது 40 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது என அகில இலங்கை கோழி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
கோழி தீவனங்களுக்கான தட்டுப்பாடு மற்றும் காலநிலை காரணிகளினால் இவ்வாறு உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
சிறிய அளவிலான கோழிப் பண்ணைகள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். சிறிய முட்டை உற்பத்தியாளர்கள், தங்களது உற்பத்திகளிலிருந்து விலகிக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தற்பொழுது முட்டை 30 முதல் 33 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகவும், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டையின் விலை 50 ரூபாவினை எட்டும் சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.