பசிலுக்கு அமைச்சு பதவியில்லை

முன்னாள் நிதியமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவுக்கு புதிய அமைச்சரவையில் அமைச்சு பதவிகள் வழங்கப்படமாட்டதென ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. உள்ளக தகவல்களை அடிப்படையாக வைத்து குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கொரோனா காலத்தினுள் நாட்டின் நிலைமையினை மீட்டெடுக்க, பசில் ராஜபக்ஷ தேசிய பட்டியல் மூலமாக பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டு பின்னர் நிதியமைச்சராக பதவி வழங்கப்பட்டது.

அண்மைக்காலத்தில் இலங்கைக்கு கடன்கள் கிடைக்கவும், இந்தியாவின் கடன் இலங்கைக்கு கிடைக்க சிறப்பாக செயற்பட்டார் என அமைச்சரவையில் பாராட்டப்பட்டார் என செய்திகள் வெளியாகிய நிலையில் அவருக்கு மீண்டும் நிதியமைச்சர் பதவி வழங்கப்படாதென செய்திகள் வெளியாகியுள்ளன.

பசிலுக்கு அமைச்சு பதவியில்லை

Social Share

Leave a Reply