அண்ணன் – தம்பி பதவி போட்டி ஆரம்பம்?

ஆளும் கட்சிக்குள் பதவி போட்டி ஆரம்பித்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்கும் 19 ஆம் திருத்த சட்டத்தை பாரளுமன்றதில் சமர்ப்பிக்கும் வாய்ப்புள்ளதாக அந்த ஊடகம் மேலும் ஊகத்தினை வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகவேண்டுமென பொதுஜன பெரமுனவுக்குள் அதிகமாக பேசப்படுவதாகவும், இன்னும் ஒரு சாரார் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகவேண்டுமென கோரி வருகின்றனர்.

அண்மையில் அமைக்கப்பட்ட புதிய அமைச்சரவையிலும், இராஜாங்க அமைச்சர்களது நியமனத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் ஆலோசனை பெறப்படவிலையெனவும், நியமனங்களில் அவர் பங்குபற்றவில்லையயனவும் சிரேஷ்ட அரசியல் பிரமுகர்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. பிரதமர் சிரேஸ்ட பாராளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கி அமைச்சரவையை நியமிக்க ஆர்வம் காட்டியதாகவும், ஜனாதிபதி முழுமையாக இந்த இளையவர்கள் என்ற முடிவினை எடுத்ததாகவும் மேலும் கூறப்பட்டுள்ளது.

19 ஆவது திருத்த சட்டத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்த வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை ஐக்கிய மக்கள் சக்தி இந்த வாரம் பாரளுமன்றத்தில் சமர்பிக்கவுள்ளதாகவும், ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் இதற்கு விருப்பமாக உள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மற்றும் நாளைய தினங்களில் கட்சி தலைவர்களது கூட்டங்களில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு அமைய பாராளுமன்றத்தில் இந்த 19 ஆம் சட்ட திருத்தம் வாக்களிப்புக்கு எடுக்கப்பட்டு நிறைவேற்றப்படுமாயின் அந்த முடிவினை சபாநாயகர் ஜனாதிபதிக்கு அறிவிப்பார்.

அவ்வாறான சூழ்நிலையில் ஜனாதிபதி பதவி விலகும் முடிவினை எடுப்பார் என நம்பபட்டாலும், ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்கும் சட்டம் நிறைவேற்றப்படுமானால், அவர் பதவி விலக வேண்டிய அவசியம் ஏற்படாது. பாராளுமன்றத்துக்கு அதிகாரம் செல்லும் போது பிரதமரின் அதிகாரம் அதிகரிக்கும்.

இன்றும் நாளைய தினமும் இலங்கை அரசியல் பரப்பில் முக்கிய மாற்றங்கள் ஏற்படும் நிலை ஏற்பட்டுளள்து. ஆளும் பொதுஜன பெரமுனவிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் விலகி வரும் நிலையில் 113 உறுப்பினர்களை இழக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

113 பாரளுமன்ற உறுப்பினர்களை எதிர்கட்சி பெற்றால் அவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தை வழங்க தயாராக இருப்பதாக கூறியுள்ள அதேவேளை, அவ்வாறான நிலையில் கட்சி தலைவர்கள் கோரினால் தான் பதவி விலகுவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

நாளையதினம் வெள்ளிக்கிழமை, முக்கிய அரசியல் மாற்றங்கள் ஏற்படுமென்ற எதிர்பார்பு பலரது மத்தியில் ஏற்பட்டுள்ளது. இழுபறி நிலை தொடருமா அல்லது அரசியல் இழுபறிக்கு தீர்வு கிடைக்குமா?

அண்ணன் - தம்பி பதவி போட்டி ஆரம்பம்?

Social Share

Leave a Reply