முககவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது . பொது இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக சேருவதனால், முக கவசம் அணிவது அவசியமில்லை என்ற கட்டுப்பாடு தளர்வு அறிவிப்பு மீள பெறப்பட்டுள்ளது.
அண்மையில் முக கவசம் அணிவது கட்டாயமில்லை என்ற அறிவிப்பு வெளியானது. புதிய சுகாதர அமைச்சர் பதவியேற்றதும் இந்த அறிவிப்பு வெளியானது என்ற தகவல்கள் வெளியாக அதனை மறுத்து சுகாதர அமைச்சர், அந்த முடிவு தொடர்பில் மீள் பரிசீலனை செய்யுமாறு உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்தார்.
அதனடிப்படையில் சுகாதார திணைக்கள பணிப்பாளர் வைத்தியகலாநிதி அசேல குணரட்ன ஏற்கனவே அறிவிக்கப்பட்டதனை மீள பெற்றுக் கொண்டார்.
இந்த அறிவிப்பு வெளியான தினமே மக்களை அவதானமாக நடந்து கொள்ளுமாறும், அறிவிப்புகள் வழங்கப்படுவதும், பின்னர் மீள பெறுவதும் புதிதல்ல என சுட்டிக் காட்டியிருந்தோம். அது போன்ற தற்போது நடைபெற்றுள்ளது.
