அராசாங்கத்துக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணை பிற்போடப்பட தானே காரணமென முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசிய கட்சி தலைவருமான ரணில் விக்ரமசிங்க இன்று பாரளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் டினேஷ் குணவர்தன “இந்த வாரம் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருகிறோம் என கூறினீர்கள். உங்களுக்கு பெரும்பான்மையிருந்தால் காட்டலாமே” என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த ரணில் விக்ரமசிங்க “நிதியமைச்சர் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் நிலையில் இப்போது நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவது நல்லதல்ல. அவர் பாராளுமன்றத்தில் அது தொடர்பாக உரையாற்றிய பின்னர் அனைவரும் கலந்து பேசி முடிவுக்கு வரலாம். இப்போது நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவது அர்த்தமற்றது” என்ற கோரிக்கையினை படியே அது பிற்போடப்பட்டது” என பதிலளித்தார்.
ஜனாதிபதியிடம், பிரதமரிடமும் அரசாங்கத்துக்குள் இங்கும், அங்குமாக என்ன நடைபெறுகிறது என்பதனை கேட்க விரும்புகிறேன் என கூறிய ரணில், 113 உறுப்பினர்கள் மூலம் இந்த பிரச்சினைகளை தீர்க்க முடியாது. அனைவரும் இணைந்து பேசி ஒரு முடிவுக்கு வரவேண்டுமென மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றதில் ஒவ்வொரு திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை எவ்வாறு நடைமுறைபடுத்துவது என பார்க்க வேண்டும். 175 ஐயோ, 200 ஐயோ வைத்துக்கொண்டு இதனை நடைமுறைப்படுத்த முடியாது. சம்பிரதாயங்களுக்கு அப்பால் சென்று முடிவெடுக்க வேண்டும். அனைவரும் பேசி முடிவுக்கு வரவேண்டும். இல்லாவிட்டால் காலி முக திடலுக்குத்தான் சாப்பாட்டுக்கு போக வேண்டும். வேறு எங்கும் சாப்பாடு கிடைக்காது என நகைச்சுவையாக கூறினார்.
