தான் வழமை போன்றே நலத்துடன் காணப்படுவதாக கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக பிரதமர் ஊடக பிரிவு அறிவித்துள்ளது.
பிரதமர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சமூக வலைத்தளங்களில் ஒழுங்கமைக்கப்பட்ட குழுவொன்றினால் முன்னெடுக்கப்பட்டுவரும் பொய்யான பிரசாரங்கள் தொடர்பில் பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நோயாளியை பார்ப்பதற்கேனும் தான் இத்தினங்களில் வைத்தியசாலைக்கு செல்லவில்லை எனத் தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தான் உடற்பயிற்சியில் ஈடுபட்டு சிறந்த ஆரோக்கியத்துடன் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நோய்வாய்ப்பட்ட நிலையில் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வெளியாகிவரும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாகும் என பிரதமர் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
