ரம்புக்கணை சம்பவத்தில், எரிபொருள் காவு வண்டிக்கு தீ மூட்டினர் என்ற சந்தகேத்தில் கைது செய்யப்பட்ட நபர் இரண்டு, ஒரு லட்ச ரூபா சரீர பிணையில் கேகாலை உயர் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பச்சை நிற மேலங்கியும், இராணுவ சீருடை வடிவிலான காற்சட்டையும் அணிந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவரின் புகைப்படங்களும், வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக பரவி வந்தன. பொலிஸாருடன் இவர் காணப்படுவதாகவும், பொலிஸாருக்கு சார்பானவர் எனவும் கூட சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பரவி வந்தன.
குற்ற புலனாய்வு பிரிவினர் இவரை இன்றைய தினம் கைது செய்திருந்தனர்.
