21 ஆம் அரசியல் அமைப்பு திருத்தத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 19 மற்றும் 20 ஆம் திருத்த சட்டங்களில் உள்ள நேர்தன்மையான சேர்க்கவேண்டிய விடயங்களை சேர்த்துக்கொண்டு இந்த திருத்தத்தை மேற்கொள்வது என்ற முடிவும் எடுக்கப்பட்டுள்ளது.
சிக்கலான அரசியல் நிலைமைகளுக்கு பின்னர் நேற்று புதிய அமைச்சரவை கூடியது. அமைச்சரவையில் இந்த சட்ட திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலான வேலைத்திட்டங்களுக்கென ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சட்ட திருத்தத்துக்கான ஜனாதிபதி குழு அமைச்சரவையினால் நிமிக்கபப்ட்டிருந்தது. அவர்கள் நேற்றைய தினம் புதிய சட்ட அறிக்கையினை ஜனாதிபதிக்கு கையளித்திருந்தனர். அதனடிப்படையில் அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பபட்டுள்ளது.
அரசாங்கம் பெரும்பான்மையினை இழக்கும் அபாயத்தில் உள்ள நிலையில் இந்த சட்ட மாற்றம் பாராளுமன்றத்துக்கு வரவுள்ளது.
