12.5 Kg லிற்றோ சமையல் எரிவாயுவின் விலை 2185 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலையாக 4860 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்று(26.04) நள்ளிரவு முதல் இந்த விலையேற்றம் அமுலுக்கு வரவுள்ளது.
2.3 Kg புதிய விலை 910 ரூபா (404 ரூபா அதிகரிப்பு)
5 Kg புதிய விலை 1945 ரூபா (874 ரூபா அதிகரிப்பு)
12.5 Kg புதிய விலை 4860 ரூபா (2185 ரூபா அதிகரிப்பு)
லிற்றோ சமையல் எரிவாயுவின் விலையினை ஏற்றாவிட்டால் காஸ் விநியோகத்தினை மேற்கொள்ள முடியாதென லிற்றோ நிறுவனம் அறிவித்திருந்த நிலையில் காஸ் விலையேற்றப்பட்டுளள்து. லிற்றோ சமையல் எரிவாயு இலங்கையினை வந்தடைந்துள்ளது என்ற செய்திகள் ஏற்கனவே வெளியாகியிருந்த நிலையில் விநியோகம் உடனடியாக நடைபெறும் வாய்ப்புகள் காணப்படுகின்றன.
ஒரு சிலிண்டருக்கு 4650 ரூபா இறக்குமதி செலவினம் காணப்படுவதாக தெரிவித்துள்ள லிற்றோ நிறுவனத்தின் புதிய தலைவர் விஜித ஹேரத்,ஒரு நாளைக்கு 250 மில்லியன் டொலர்கள் நட்டம் ஏற்படுவதாகவும் இந்த நிலையில் தற்போதய கையிருப்பினையும் இதே விலையில் தொடர்ந்தும் விநியோகம் செய்தால் இனி இறக்குமதி செய்ய முடியாத நிலையேற்படுமென தெரிவித்த்திருந்தார்.