மின்சார பாவனைக்கான கட்டணம் இன்று(26.04) அதிகரிக்கப்படமாட்டாதென பொது சேவைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரட்நாயக்க இன்று தெரிவித்துள்ளார்.
மின்சார கட்டண சீரமைப்பு அரச அனுமதிக்காக வழங்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் அனுமதி கிடைத்ததும் மின் பாவனை கட்டணம் அதிகரிக்கப்படுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.