இந்தோனேசியா மருத்துவ உதவிகள் வந்தன

இந்தோனேசியா நாட்டினது மருத்துவ உதவிகளது முதற் கட்ட பொருட்கள் நேற்று(28.04) இலங்கையை வந்தடைந்துள்ளன. ஸ்ரீலங்கன் விமான சேவை மூலமாக கொண்டுவரப்பட்ட பொருட்களை சுகாதர அமைச்சர் சன்ன ஜெயசுமன கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொறுப்பேற்றார்.

இலங்கை சுகாதர திணைக்களத்தின் கோரிக்கைக்கு அமைவாக அத்தியாவசிய மருந்து பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள், மனிதாபிமான உதவியாக வழங்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்தோனேசியா தூதுவர் ரொபிங் வெளிவிவகார அமைச்சர் G.L பீரிஸ் இடம் தெரிவித்துள்ளார்.

51 கோடியே 75 இலட்சம் ரூபா பெறுமதியான 31.5 தொன் மருத்துவ பொருட்கள் இவ்வாறு இலங்கைக்கு வழங்கப்பட்டுளளதாக தூதுவர் மேலும் தெரிவித்துள்ளார். இரண்டாம் கட்ட பொருட்கள் எதிர்வரும் மே மாதம் 07 ஆம் திகதி நாட்டை வந்தடையுமென தெரிவிக்கப்பட்டுளள்து.

இந்தோனேசியாவிலுள்ள உலக சுகாதார நிறுவன அதிகாரிகள், இந்தோனேசியா மருந்து உற்பத்தி நிறுவனங்களின் ஆதரவோடு இந்த உதவி இலங்கைக்கு கிடைத்துள்ளன. இந்த பொருட்களை வழங்கிய இந்தோனேசிய அரசுக்கு இலங்கையினது நன்றிகளை தெரிவிப்பதாக இந்தினேசியா தூதுவரிடம் வெளிவிவகார அமைச்சர் G.L பீரிஸ் கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் வானிலை மாற்ற மாநாட்டில் இந்தோனேசியா வெளிவிவிவகார அமைச்சரை சந்தித்து உதவிகள் தொடர்பாக பேசியத்தனை நினைவு கூர்ந்த பீரிஸ், இலங்கை, இந்தோனேசியா 70 ஆண்டு நட்புறவு நிகழ்வில் இந்தோனேசியா வெளிவிகார அமைச்சர் ரெட்னோ மர்சூடி கலந்து கொள்ள வேண்டுமென்ற அழைப்பினையும் வெளிவிவகார அமைச்சர் இந்தோனேசிய தூதுவரிடம் தெரிவித்தார்.

இந்தோனேசியா மருத்துவ உதவிகள் வந்தன

Social Share

Leave a Reply