ஜனாதிபதி இடைக்கால அரசுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புதிய பிரதமரை நியமிக்கவோ இடைக்கால அரசுக்கோ சம்மதம் தெரிவிக்கவில்லையென செய்திகள் வெளியாகியுள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிரிசேன புதிய பிரதமரோடு இடைக்கால அரசாங்கம் அமைக்க சம்மதம் தெரிவித்ததாக கூறியுள்ளதனை இந்த கலந்துரையாடலில் பங்குபற்றிய ஜனாதிபதி அலுவலக அதிகாரி ஒருவர் அவ்வாறு பேசப்படவில்லையென ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

அரசிலிருத்து வெளியேறிய அணி பெரும்பான்மையினை நிரூபித்து, அவர்களுடைய திட்ட அறிக்கையினை சமர்ப்பித்தால், அவர்கள் பிரேரிப்பவரை பிரதமராக நியமிக்கலாமென ஜனாதிபதி கூறியதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார். அத்தோடு இவற்றை தயார் செய்து கொண்டு வந்தால் தொடர்ந்து பேசுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி இடைக்கால அரசுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை

Social Share

Leave a Reply