பொலிஸாரிடம் 10 கோடி நட்டஈடு கோரிய போராட்ட நபர்

“GoHomeGotta2022” முக புத்தக உரிமையாளர் திஸர அனுராத பண்டார தன்னை காவல்துறையினர் கைது செய்தமைக்கு நட்ட ஈடாக 10 கோடி ரூபா நட்ட ஈடு கோரி அடிப்படை உரிமை மீறல் வழக்கினை மேல் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளார்.

“GoHomeGotta2022” என்ற முக புத்தக பக்கத்தினூடாக ஜனாதிபதிக்கும், நாட்டுக்கும் அபகீர்த்தியினை ஏற்படுத்தினார் என குற்றம் சுமத்தப்பட்ட கணித ஆசிரியரான திஸர கடந்த ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி மோதர பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

கொழும்பு பல்கலைகழகத்தில் கணித துறையில் பட்டப்பிடிப்பினை நிறைவு செய்து இங்கிலாந்து மாணவர்களுக்கு ஒன்லைன் மூலம் கல்வி கற்பித்து வரும் இவர், வெளிநாட்டு நாணய பரிமாற்றமூடமாக நாட்டுக்கு வெளிநாட்டு வருமானத்தை பெற்றுக் கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் மா அதிபர் சந்தன விக்கரமரட்ன, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகக்கோன், பிரதி பொலிஸ் மா அதிபர் சந்திர குமார, மோதர பொலிஸ் பொறுப்பதிகாரி நளின் சிரியந்த ஆகியோர் அடங்கலாக இன்னும் பலர் பிரதிவாதிகளாக வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இலங்கையில் உள்ள அரசியல் நடைமுறைகள், திருப்தியாக இல்லை எனவும், அதன் காரணமாகவே இந்த நாடு பின்னடைவை சந்தித்து வருவதாகவும் தெரிவித்துள்ள திஸ்ஸ அதற்கெதிராக முக புத்தகத்தினூடாக கருத்துக்களை வெளியிட்டு போராட்டத்துக்கு இளைஞர்களையும் மக்களையும் ஒன்று திரட்டி சுமூகமான முறையில் போராட்டங்களை ஏற்பாடு செய்தார்.

மோதர பொலிஸ் பொறுப்பதிகாரி “ஜனாதிபதிக்கு எதிராக போராட்டம் செய்ய முடியாதெனவும் ஐந்து வருடங்களுக்கு ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார் எனவும் கூறி கைது செய்துள்ளதாக கூறியிருந்தார். ஆனால் “B” அறிக்கையில் வைத்தியர் கெலும் கெர்னருக்கும் தனக்கும் தொடர்பு இருப்பதாகவும், நாட்டில் குழப்ப நிலையை ஏற்படுத்த முயற்சி செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்தும் கெர்னர் நாட்டிலிருப்பதாகவும், மக்கள் முன்னிலையில் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் பொலிஸார் இதுவரை அவருக்கெதிராக எந்த நடவடிக்கையினை எடுக்கவில்லையெனவும் மனுதாரர் மேலும் தெரிவித்துள்ளார்.

பொலிஸாரிடம் 10 கோடி நட்டஈடு கோரிய போராட்ட நபர்

Social Share

Leave a Reply