ராஜபக்ஷ கச்சாமி போட்டவர் சாணக்கியன் – ரணில்

2013 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர் பதவியினை பெற்று மஹிந்த ராஜபக்ஷ கச்சாமி, பசில் ராஜக்ஷ கச்சாமி, நாமல் ராஜபக்ஷ கச்சாமி போட்டவர் சண்ணகியானே எனவும், தான் ஒரு போதும் மஹிந்தவோடு கூட்டு அமைக்கவில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நேற்று பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் தனித்தனியாக சென்று ஆளும் கட்சி சார்பாக பரிந்துரை செய்யப்பட்ட பிரதி சபாநாயகர் வேட்பாளர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவுக்கு ஆதரவு வழங்குமாறு கோரியிருந்தார் எனவும், 65 பாரளுமன்ற உறுப்பினர்களே மக்களுக்காக உள்ளனர் என்றும் மிகுதி 148 பேரும் ராஜபக்ஷவினருக்காகவே உள்ளனர் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தனது உரையில் கூறியிருந்தார்.

அதற்கான பதிலை இன்று வழங்கிய போதே ரணில் விக்ரமசிங்க சாணக்கியன் மீது இவ்வாறன வார்த்தை தாக்குதலை மேற்கொண்டார். தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாரளுமன்ற உறுப்பினர்கள், ஒரு சிலரிடமும் மேலும் சிலருடனும் பேசினேன் என கூறினார். பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனுடனும் பேசியதாக கூறியதை அவர் மறுத்திருந்தார்.

ஏற்கனவே இருந்த உப சபாநாயகர் மீண்டும் பதவிக்கு வருவது நல்ல விடயம் எனவும் தெரிவித்த ரணில், ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய உப சபாநாயகர் பதவிக்கு பரிந்துரை செய்யபப்டுவதற்கு தான் ஆதரவு வழங்குவதாகவும், தமிழ் தேசிய கூட்டமைப்பு கொண்டு வரும் ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்குவதாகவும் தெரிவித்திருந்தேன் எனவும் கூறினார்.

சாணக்கியன் தனது உரையில் தனது வீட்டினை சுற்றி வளைக்க வேண்டுமென கூறியதாகவும் அதன் காரணமாக தனது வீட்டை சுற்றி நாளை(07.05) போராட்டத்துக்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும் தான் அறிந்துள்ளதாகவும், அவ்வாறான செய்திகள் பகிரப்பட்டு வருவதாகவும் இவ்வாறன நடவடிக்கைகள் பிழையானவை எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

யார் எந்தப்பக்கம் வாக்களித்திருந்தாலும் எங்களது செயற்பாடுகளில் நாம் இணைந்து செயற்பட வேண்டும். இந்த நாடே பாரளுமன்றத்திலுள்ள அனைவரையுமே திட்டுகின்றனர். ஆளும் கட்சியும் மோதுகின்றன. ஆளும் கட்சிக்குள் மோதல், எதிர்கட்சிக்குள் மோதல், ஆனால் நாம் எமக்குள் சண்டையிடுகிறோம். பிரச்சினை படுகிறோம். மக்களுக்காக எதனையும் செய்யவில்லை. நாம் இவ்வாறு செயற்பட்டால் மக்கள் எங்களை சுற்றி வளைப்பார்கள். எங்களுக்கெதிராக செயற்படுவார்கள் என மேலும் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இதே நிலை தொடர்ந்தால் அனைத்தையும் மூடிவிட்டு எல்லோரும் வீடு செல்வோம் என்ற கருத்தையும் முன் வைத்திருந்தார்.

ராஜபக்ஷ கச்சாமி போட்டவர் சாணக்கியன் - ரணில்

Social Share

Leave a Reply