இன்று பிற்பகல் 5.30 இற்கு விசேட அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதியினால் கூட்டப்படவுள்ளது. நாட்டின் தற்போதைய சூழ்நிலை தொடர்பில் கலந்துரையாடவே இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
வெள்ளிக்கிழமை தினத்தில் அமைச்சரவை கூட்டம் கூட்டப்படும் நிலயில் ஏதாவது முக்கியமான அறிவிப்புகள் வருமோ என்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது.
அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் எரிபொருள் விலையேற்றத்துக்கான அனுமதி அமைச்சரவையில் முன் வைக்கப்படுமென வலுசக்தி அமைச்சர் தெரிவித்திருந்தார். இன்றைய கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டால் இன்று முதல் எரிபொருள் விலையேற்றத்துக்கான வாய்ப்புகளும் அதிகமாக காணப்படுகிறன்றன.
