பிரதி சபாநாயகர் மீண்டும் இராஜினாமா

நேற்றைய தினம் வாக்களிப்பின் மூலம் மீண்டும் பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்ட கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மீண்டும் தனது இராஜினாமா கடித்தை ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளார்.

கடந்த ஒரு மாத காலத்துக்குள் மூன்றாவது முறையாக இராஜினாமா கடிதத்தை அவர் வழங்குகிறார். முதல் கடிதத்தை ஜனாதிபதி ஏற்க மறுத்தார். இரண்டாவது தடவையாக ஏற்றுக் கொண்டார். ஏப்ரல் 30 ஆம் திகதி வெற்றிடமான அவரின் பதவிக்கு மீண்டும் நேற்று அவர் பரிந்துரை செய்யப்பட்டு போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

நேற்றைய இவரின் நியமிப்பு பல வாத பிரதி வாதங்களையும் உருவாக்கியது. இந்த நிலையில் இன்று மீண்டும் தான் இராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நாடகங்கள் மூலம் பாராளுமன்றத்தின் காலம் வீணடிக்கப்படுவதுடன் மக்களும் ஏமாற்றப்படுகின்றனர் என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்திருந்தார்.

இவ்வாறான நடவடிக்கைகள் மக்களுக்கு எரிச்சலையும், சலிப்பையும் ஏற்படுத்தும் என்பது நிதர்சனமான உண்மை.

பிரதி சபாநாயகர் மீண்டும் இராஜினாமா

Social Share

Leave a Reply