பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தொடர்பில் இன்று காலை ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க கூறிய கருத்துக்களுக்கு சாணக்கியன் பாராளுமன்றத்தில் பதிலளித்துள்ளார்.
“ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியோடு இருந்தமை பற்றியும், மனித படுகொலைகள் செய்தவர்களோடும் இருந்தமைக்கு தான் வெட்கப்டுவதாகவும் நானே பாராளுமன்றத்திலும், மக்களுக்கும் பல தடைவைகள் கூறியுள்ளேன். இதில புதிய இரகசியம் எதுவுமில்லை என மேலும் சாணக்கியன் கூறியுள்ளார்.
பிள்ளையானின் 600 பேர் கொலை சம்பவத்துடன் தன்னை இணைத்து கூறினார். நான் சம்பவத்தின் போது பிறக்கவே இல்லை. எவ்வாறு அந்த சம்பவத்துடன் எனக்கு தொடர்பு என விளங்கவில்லை என கூறிய சாணக்கியன், தனது சுந்தந்திர கட்சி நியமன கடிதத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த முன்னாள் பிரதமர், 2015 ஆம் ஆண்டு அவரால் நியமிக்கப்பட்ட மத்திய வங்கி ஆளுநர் எங்கே இருக்கிறார் என கண்டுபிடித்து பாராளுமன்றத்தில் கூறலாம். அலோசியஸ் மஹேந்திரனுடனான கொடுக்கல் வாங்கல் சிக்கல் தொடர்பிலான ஆவணங்களை பாராளுமன்றத்தில் கையளிக்கலாமேயென கேள்வி எழுப்பினார்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு ரணிலும் ஒரு முக்கியமான காரணம் எனவும் சாணக்கியன் கூறினார்.
ஐந்து தடைவைகள் பிரதமராக இருந்துள்ள சிரேஷ்ட உறுப்பினரான ரணில் விக்ரமசிங்கவை புதியவரான நான் அதிகம் இங்கே தனிப்பட்ட ரீதியில் விமர்சிக்க விரும்பவில்லையென கூறியுள்ள சாணக்கியன், அவ்வாறு ஆரம்பித்தால் ஒரு நாள் போதாது என மேலும் கூறியுள்ளார்.
ட்விட்டரில் யாரோ கூறிய கருத்துக்கு தன்னை அதனோடு சம்மந்தப்படுத்தியுள்ளதாக கூறியுள்ள முன்னாள் பிரதமர், மட்டகளப்பில் இருக்கும் நான் இங்கே பைப் வீதியிலுள்ள அவரது வீட்டை சுற்றி வழைப்பேன் என கூறியுள்ளது அவர் அந்த வருடங்களாக பிரதமராக இருந்தும் இவ்வாறு பயப்படுகிறார் எனவும் கூறினார்.
“கோ கோம் ரணில்” என கூறவில்லை. மக்களே அவரை வீட்டை அனுப்பி விட்டார்கள். தேசிய பட்டியில் மூலம் மீண்டும் இங்கே வந்துள்ளார் என கூறிய அதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஷாமில் தன்னை பற்றிய கூறிய கருத்துகளுக்கும் பதிலளித்துள்ளார்.
தொடர்புடைய செய்தி