பாராளுமன்றத்துக்கு உள் நுழையும் வீதியில் போராட்டத்தில் ஈடுபட்ட பலக்லைக்கழக மாணவர்கள் மீது தாக்குகள் நடத்தப்பட்ட நிலையில் அவர்கள் தொடர்ந்தும் வீதியினை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதனால் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் வெளியேற முடியாத நிலையில் பாராளுமன்றத்துக்குள் சிக்கியுள்ளதாக அறிய முடிகிறது.
பாரளுமன்றம் 17 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் போராட்டத்தை கைவிட்டு மீண்டும் 17 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் அந்த இடத்தில் மாணவர்கள் விலக ஆரம்பிக்கும் நிலையிலும், மாற்று வழிகளினூடாகவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கிருந்து வெளியேற தயாராகி வருவதாகவும் அறிய முடிகிறது.
