ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அமுல் செய்யப்பட்டுள்ள அவசரகால சட்டத்தை மீள பெறுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கையினை முன் வைத்துள்ளது.
அமைதியான போராட்டங்களில் ஈடுபடவும், தமது கருத்துக்களை வெளியிடவும் அனைவருக்கும் உரிமையுள்ளது என்பதனை சுட்டி காட்டியுள்ள சங்கம், போராட்டங்களை தடுப்பதனால் நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்க்க முடியாது எனவும் கூறியுள்ளது.
போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடவேண்டும் என தெரிவித்துள்ள அதேவேளை, அவசரகால சட்டம் ஏன் பிறப்பிக்கப்பட்டது என மக்களுக்கு கூறவேண்டுமென சட்டதரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கோரியுள்ளது.
பொதுமக்கள் மற்றும் பொதுசேவைகள் பாதுகாப்பு ஆகியவற்றுக்காகவும், அத்தியாவசிய பொருட்களின் சீரான விநியோகத்துக்காகவும் இந்த அவசரகால சட்டம் அமுல் செய்யப்பட்டுள்ளது.
நேற்று(06.05) தேசிய ரீதியில் நடாத்தப்பட்ட ஹர்த்தால் மற்றும் போராட்டங்கள் காரணமாக இந்த அவசரகால சட்டம் அமுல் செய்யப்பட்டுளளதாக பொதுவாக நம்பப்படுகிறது.
