பிரதி சபாநாயகர் கேலிக்கூத்து, அனைவரும் வீட்டிலிருங்கள் – மஹேல

பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ராஜினாமா செய்த சம்பவத்தை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்த்தன கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதென்ன நகைச்சுவையா என கேள்வி எழுப்பியுள்ள மஹேல, பணத்தையும், நேரத்தையும் விரயம் செய்து பிரதி சபாநாயகரை நியமித்தால் அவர் இராஜினாமா செய்துவிட்டார். இந்த நியமனம் இப்போதைய நாட்டின் நிலையில் அவசரமாக தேவைதானா எனவும் மஹேல கேள்வி எழுப்பியுள்ளார்.

முடியாவிட்டால் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இராஜினாமா செய்துவிட்டு வீட்டில் இருங்கள்
என “கோ ஹாம் கோட்டா” ஹாஸ் டக்குடன் ட்விட்டர் பதிவினை மஹேல ஜெயவர்த்தன பதிவிட்டுள்ளார்.

இந்தியாவில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு IPL தொடரில் பயிற்சிகளை வழங்கிவரும் நிலையில் இந்த பதிவினை அவர் இட்டுள்ளார்.

பிரதி சபாநாயகர் கேலிக்கூத்து, அனைவரும் வீட்டிலிருங்கள் - மஹேல

Social Share

Leave a Reply