LP காஸ் தொடர்பாக மக்களுக்கு அறிவிப்பு

லிற்றோ சமையல் எரிவாயுவினை இந்த வாரம் விநியோகம் செய்ய முடியாத நிலைமை காணப்படுகிறது. ஆகவே பொது மக்கள் வரிசைகளில் சமையல் எரிவாயுவுக்காக காத்திருக்க வேண்டாமென லிற்றோ எரிவாயு நிறுவனம் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இன்றைய தினம் 7 மில்லியன் டொலர்கள் கட்டணம் செலுத்த எதிர்பார்த்திருப்பதாகவும் அவ்வாறு செலுத்தினால் 13, 14 ஆம் திகதிகளில் இலங்கையை எரிவாயு கப்பல் வந்தடையுமென அந்த நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அத்தோடு தொழில் உற்பத்திகளுக்கு பாவிக்கப்படும் எரிவாயு மட்டுமே கையிருப்பில் இருபப்தாக மேலும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமையல் எரிவாயு தேவை என கோரி பல இடங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

LP காஸ் தொடர்பாக மக்களுக்கு அறிவிப்பு

Social Share

Leave a Reply