ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளர் தயஸ்ரீ ஜயசேகர பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகுவது சந்தேகமென தெரிவித்துள்ளார்.
தனக்கு கிடைத்த தகவல்களின் படி பிரதேசசபை உறுப்பினர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக கூடாதென ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னாள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும், மக்கள் தன்னை பதவி விலக வேண்டாமென கோருகிறார்கள், நான் எவ்வாறு பதவி விலகுவது என பிரதமர் கேள்வியெழுப்புவார் எனவும் தயஸ்ரீ ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அலரி மாளிகையில் இது தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர்களுடன் சந்திப்பு ஒன்று இடம்பெற்றதாக மேலும் தயாஸ்ரீ கூறியுள்ளார்.
சட்டத்தரணிகள் சங்கத்துடன் சந்திப்பு மிகவும் சிறப்பாக நடைபெற்றதாகவும், அவர்களது முன் மொழிவுகள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும், நிறைவேற்று அதிகார முறையினை நீக்குவதும், மாகாணசபைகளை நீக்குவதும் முக்கியமானதென பாராளுமன்ற உறுப்பினர் தயாஸ்ரீ ஜயசேகர தெரிவித்துள்ளார்.
