முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தினர் மறைந்திருப்பதாகவும், வெளிநாட்டுக்கு தப்பி செல்ல உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. மஹிந்த ராஜபக்ஷ திருகோணமலை கடற்படை முகாமுக்குள் உள்ள தீவில் தங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வாறான நிலையில் எந்த சூழ்நிலையும் தனது தகப்பனும், குடும்பத்தினரும் நாட்டை விட்டு செல்ல மாட்டோம் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சர்வதேச ஊடகமொன்றுக்கு தெரிவித்த்துள்ளார்.
தேசியளவில் தங்கள் குடுமபம் மீது மக்கள் கோபத்தில் உள்ளமை ஒரு கருப்பு புள்ளி என கூறியுள்ள நாமல், வெளிநாட்டுக்கு தப்பி செல்லவுள்ளோம் என்பது உண்மைக்கு புறம்பான செய்தி எனவும் கூறியுள்ளார்.
தனது தகப்பன் பாதுகாப்பான ஒரு இடத்தில இருப்பதாகவும், தமது குடும்பத்துடன் தொடர்புகளில் இருப்பதாகவும் தெரிவித்துள்ள நாமல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருத்து ஒரு போதும் அவர் விலகப்போவதில்லை எனவும் கூறியுள்ளார்.
“இலங்கை மக்கள் போராட்டங்களில் ஈடுபட முழுமையான உரிமை உண்டு எனவும், தமது குடும்பம் மக்களோடு எப்போதும் இருக்கும்” எனவும் மேலும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
