மத்திய வங்கி ஆளுநர் காலக்கெடு. பதவி விலகுவதாக எச்சரிக்கை

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியில் சிக்கல்களை உடனடியாக தீர்க்குமாறு மத்திய வாங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் விஜயசிங்க தெரிவித்துள்ளார். ஓரிரு வாரங்களுக்குள் பிரச்சினைகளை தீர்க்காதவிடத்து நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதர பிரச்சினைகளை தீர்க்க முடியாதெனவும், அவ்வாறான சூழ்நிலையில் தான் உடனடியாக பதவி விலகுவேன் எனவும் அறிவித்துள்ளார்.

ஆட்சிக்கு யார் வருவது என்பது தொடர்பில் தனக்கு சிக்கல் இல்லையெனவும், பிரச்சினைகளுக்கு தீர்வு காணவேண்டுமென்பதே முக்கியமெனவும், ஜனாதிபதி அடங்கலாக சகல அரசியல் தரப்பிரனுக்கும் இந்த விடயத்தை தெரிவித்துள்ளதாக ஆளுநர் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

இரண்டு, மூன்று தினங்களுக்குள் பிரதமர், அமைச்சரவை மற்றும் உரிய அரசாங்கம் அமைக்காவிட்டால் நாடு மேலும் மோசமான நிலைக்கு தள்ளப்படுமென மேலும் கூறியுள்ளார். எரிபொருள் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும். மின் தடை 10 மணித்தியாலங்களுக்கு மேல் அதிகரிக்கும் எனவும் கலாநிதி நந்தலால் விஜயசிங்க தன்னுடைய கருத்தை வெளியிட்டுள்ளார்.

மத்திய வங்கி ஆளுநர் காலக்கெடு. பதவி விலகுவதாக எச்சரிக்கை

Social Share

Leave a Reply