ஜனாதிபதியின் உரை

அனைத்து கட்சிகளுக்கும் ஆட்சியமைக்க முன்வருமாறு ஜானதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று மக்களுக்கு ஆற்றிய உரையில் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த வாரத்துக்குள் புதிய பிரதமரையும், அமைச்சரவையையும் நியமிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் ஜானதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ஆற்றிய உரையின் முக்கிய சாராம்சங்கள்.

கடந்த காலங்களில் பாரளுமன்றத்தில் அதிக பெரும்பான்மையினை உடையவர்கள் ஆட்சி அமைப்பது தொடர்பில் அறிவித்திருந்தேன். அது தொடர்பில் சகல கட்சிகளுடனும் கலந்துரையாடியிருந்தேன்.

ராஜபக்ஷ யாருமற்ற அமைச்சரவையினை நியமித்திருந்தேன். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகியிருக்கும் நிலையில் பிரதமர் மற்றும் புதிய அமைச்சரவையை உருவாக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 09 ஆம் திகதி நடைபெற்ற சம்பவம் தொடர்பில் நீங்கள் அறிந்துள்ளீர்கள். சொற்ப நேரத்துக்குள் சகல அசம்பாவிதங்களும் நடைபெற்று முடிந்துவிட்டன. ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அரசியல் கட்சிகளது ஆதரவோடு நடைபெற்ற இந்த சமப்வத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.

இந்த சம்பவங்களில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அடங்கலாக 09 பேர் இறந்துள்ளனர். 200 இற்க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். பாரியளவிலான பொருட்சேதங்கள் ஏற்பட்ட்டுள்ளன.

சம்பவங்கள் தொடர்பில் உரிய பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முப்படைக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட உரிய நடவடிக்கைளை எடுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் சிக்கல் நிலையினை நிறைவுக்கு கொண்டுவர சகல அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுப்பதோடு, புதிய அரசாங்கத்தை அமைக்க அழைப்பு விடுக்கிறேன்.

இந்த வாரத்துக்குள் பாரளுமன்றத்தில் பெரும்பான்மையினை காட்டும் கட்சியின் பிரதிநித்துக்கு, மக்கள் ஆதரவு உள்ள ஒருவருக்கு பிரதமர் பதவியினை வழங்கி அமைச்சரவையினை உருவாக்க அழைப்பு விடுக்கிறேன்.

19 ஆம் அரசையலமைப்பில் உள்ள முக்கிய விடயங்களோடு புதிய அரசியலமைப்பை உருவாக்க ஓத்துழைப்பதோடு. ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்கும் சட்டத்துக்கும் ஆதரவளிப்பேன்.

கலவரங்கள் அற்ற அமைதியான போராட்டங்களுக்கு எந்த பங்கமும் விளைவிக்கப்படமாட்டாது.

ஜனாதிபதியின் உரை

Social Share

Leave a Reply