ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போன்று பாரளுமன்றம் எதிர்வரும் 17 ஆம் திகதி கூட்டப்படவுள்ளதாக இன்று கட்சி தலைவர்களது கூட்டத்தில் பங்குபற்றிய தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் பாரளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் வி மீடியாவுக்கு உறுதி செய்தார்.
மூன்று முக்கிய விடயங்கள் பாரளுமன்றத்தில் அன்றைய தினம் நடைபெறவுள்ளன. பிரதி சபாநாயகர் தெரிவு நடைபெறவுள்ளது. கடந்த 02 ஆம் திகதி வாக்களிப்பு மூலம் தெரிவான பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இரண்டாவது தடவையாக இராஜினாமா செய்ததன் மூலம் அந்த பதவி வெற்றிடமாகியுள்ளது.
நிலையியல் கட்டளை சட்டம் மீதான விவாதம் நடைபெறவுள்ளது. மூன்றாவது முக்கியமான விடயமாக ஜனாதிபதி மீது விருப்பமின்மை தீர்மானத்தை ஏற்றுக் கொள்வது சமர்பிக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி மீதான நம்பிக்கையில்லா பிரேரணையினை ஒழுங்கு பத்திரத்தில் சேர்த்துக்கொள்வதற்கு சபாநாயகர் இழுத்தடிப்பு செய்துவந்த நிலையில் மிகுந்த போராட்டத்தின் மத்தியில் அவரை சமமதிக்க வைத்து இந்த தீர்மானத்தை பாரளுமன்றத்தில் கொண்டுவருவதாக மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.
