ரணில் பிரதமராவதற்கு எதிர்ப்பு

ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியினை இன்று(12.05) மாலை ஏற்கிறார் என ஐக்கிய தேசி கட்சி வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன. இவ்வாறான நிலையில் மதகுருமார் சிலர் ரணில் விக்ரமசிங்க பிரதமராவதற்கு தமது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.

“ரணில் விக்ரமசிங்க அவருடைய கட்சியில் ஒரே ஒரு பாராளுமன்ற உறுப்பினர். பெரும்பான்மை அற்ற ஒருவரினை பிரதமராக நியமிப்பது சட்டவிரோதமானது” என தன்னுடைய கருத்தை வெளியிட்டுள்ளார்.

மஹாநாயக்க சங்கத்தினர் தெரிவிக்கும் கருத்துக்களை ஜனாதிபதி செவிசாய்க்க வேண்டுமெனவும், கட்சி சார்பற்ற ஒருவரை பிரதமராக நியமிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரும் நிலையில் மக்களால் தோற்கடிப்பட்ட ஒருவரை ஜனாதிபதியாக நியமிக்க கூடாதென” வணக்கத்துக்குரிய ஓமல்பே சோன்பித்த தேரோ தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவும் மக்களை ஏமாற்றியுள்ளார். ஜனாதிபதியும் அதேபோன்று மக்களை ஏமாற்றுகிறார் எனவும், சஜித் பிரேமதாசவின் கோரிக்கையினை கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

ரணில் பிரதமராவதற்கு எதிர்ப்பு

Social Share

Leave a Reply