இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு தமது ஆதரவினை வழங்குவதாக அறிவித்துள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்றுள்ள நிலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தமது கட்சி புதிய பிரதமருக்கு தமது ஆதரவினை வழங்குவதாக அறிவித்துள்ளது.
பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் பங்காளிகளாக இருந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கம் மக்களுக்குரிய எந்த தேவைகளையும் பூர்த்தி செய்யவில்லையென கூறி அரசாங்கத்தை விட்டு வெளியேறியது. இந்த நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருக்கும் நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளது.
