மட்டுப்படுத்தப்பட்ட ஒரு காலத்துக்கே புதிய அமைச்சரவை செயற்படுமென ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துளளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை தீர்க்கப்படும் வரையிலே இந்த அமைச்சரவை செயற்படுமென தெரிவித்த அகிலவிராஜ், நாட்டில் தற்போதுள்ள தேவைகளுக்கேற்பவே இந்த அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளதாக மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
பாரளுமன்றத்தில் பிரதமர் ரணிலுக்கு பெரும்பாண்மையுள்ளதாக தெரிவித்த முன்னாள் அமைச்சர் அகில விராஜ், நியமிக்கப்படவுள்ள அமைச்சரவை சகல கட்சிகளையும் உள்ளடக்கியதாகவும், வழமையான அமைச்சரவையிலிருத்து மாறுபட்டதாகவும் அமையுமென கூறியுள்ளார்.
நியமிக்கப்படும் அமைச்சர்களுக்கு வழமையாக வழங்கப்படும் சலுகைகள் வழங்கப்படாதெனவும் மேலும் அவர் கூறினார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பிரதமராக நியமிக்கப்பட்டமையில் ஜனாதிபதி மட்டுமே ஈடுப்பட்டார் எனவும், பாராளுமன்ற உறுப்பினர்கள் மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ ஆகியோர் சம்மந்தப்படவில்லை எனவும் ஊடக சந்திப்பில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் பிரதமர் நியமிப்பு தொடர்பிலான விடயங்களை வெளிப்படுத்தினார்.
