பிரதமரின் விசேட குழுவில் ஐ.தே.க உறுப்பினர்கள் மட்டும்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்ற பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதர சிக்கல்களை அடையாளப்படுத்த விசேட குழுவொன்றை நியமித்துள்ளார்.

நியமிக்கப்பட்டுள்ள குழு பிரச்சசினைகளை ஆராய்ந்து பிரதமருக்கு அறிக்கை சமர்ப்பிக்கும்.

இந்த குழுவில் ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேயவர்தன உணவு தட்டுப்பாடுகள் தொடர்பிலும், அத்தோடு அத்தியாவசிய உணவுப் பொருட்களை மக்களுக்கு விநியோகிப்பது தொடர்பிலான பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

உப தலைவர் அகில விராஜ் காரியவசம் உரம் தொடர்பிலான விடயங்களுக்கும், பிரதி தலைவர் ருவான் விஜயவர்தன மருந்து பொருட்களுக்கும், தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க எரிபொருள் தொடர்பிலான சிக்கல்களுக்கும் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விடயங்கள் தொடர்பில் தட்டுப்பாடுகளுக்கான காரணங்கள், மக்களுக்கு விநியோகம் செய்தல் போன்ற விடயங்களை அவற்றுக்கு பொறுப்பான அதிகாரிகளோடு ஆராய்ந்து பிரதமருக்கு அறிக்கை சமர்பிக்குமாறு இந்த குழுவுக்கு பணிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் விசேட குழுவில் ஐ.தே.க உறுப்பினர்கள் மட்டும்

Social Share

Leave a Reply