இலங்கையில் முன்னாள் விடுதலை புலிகள் உறுப்பினர்கள் மே 18 தாக்குதல் நடத்தவுள்ளதாக இந்திய ஊடகம் த ஹிந்து செய்தி வெளியிட்டிருந்தது. இந்திய புலனாய்வு துறையின் தகவல்களின் அடிப்பையில் இந்த செய்தியினை வெளியிட்டுள்ளதாக அந்த ஊடகம் தெரிவிதத்திருந்தது.
அந்த செய்தி தொடர்பில் இலங்கை புலனாய்வு துறைக்கு அவ்வாறான தகவல்கள் கிடைக்கவில்லையென இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருந்தது. இவ்வாறான நிலையில் இந்திய புலனாய்வு துறையிடம் இந்த தகவல்கள் தொடர்பிலான விடயங்களை இலங்கை பாதுகாப்பு அமைச்சு கேட்டறிந்துள்ளது.
இது சாதரணமான பொது தகவல் எனவும், அது தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்றுவருவதாகவும் பாதுகாப்பு அமைச்சுக்கு தகவல் வழங்கியுள்ளதாக அமைச்சு தெரிவிவித்துள்ளது.
எவ்வாறு இருப்பினும் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்தி
