அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற “கோட்டா கோ ஹோம்” போராட்டத்தில் “தமிழ் இனப்படுகொலை நாள் பேரணி” தொடர்பில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதனை வாங்கிய போராட்டத்தில் கலந்து கொண்ட நபர் ஒருவர் “இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலையா, ஏன் நீதிமன்றத்திற்கு செல்லவில்லை”என கேள்வியெழுப்பி அந்த துண்டு பிரசுரங்களை கிழித்து எறிந்ததுடன் “இந்த போராட்டம் எம்மால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தில கதைக்கும் விடயமல்ல. நீங்கள் இந்த இடத்தை விட்டு செல்லாவிட்டால், நாங்கள் அனுப்புவோம்” என கூறியதுடன், துண்டு பிரசுரங்களை வழங்கியவரை நோக்கி செல்ல வேறு சிலரால் அவர் தடுக்கப்பட்டார்.
இந்த விடயம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வாத பிரதி வாதங்கள் பகிரப்பட்டு வருகின்றன.
