பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்த, சஞ்சீவ எதிர்மன்னே,மற்றும் மேல்மாகாண சிரேஷ்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் தேசபந்து தென்னக்கோன் அடங்கலாக 22 பேரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.
இவர்களோடு மொறட்டுவை மாநகர முதல்வர் சமன் லால் பெர்னாண்டோ, கொழும்பு மாநகரசபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகமகே, டான் பிரியசாத் ஆகியோரையும் கைது செய்யுமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
கொழும்பில் கடந்த 09 ஆம் திகதி போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் மீது தாக்குதல் நடாத்திய சம்பவத்தில் இவர்களது சம்மந்தம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அதனடிப்படையில் கைது செய்யுமாறும் பொலிஸ் மா அதிபரினால் கூறப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் உதவி பொலிஸ் மா அதிபருக்கு, சட்டமா அதிபர் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.
