சமையல் எரிவாயு வழமைக்கு திரும்புகிறது

லிற்றோ சமையல் எரிவாயு விநியோகம் வழமைக்கு திரும்பும் என லிற்றோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பணம் இன்று இரண்டு கப்பல்களுக்கு செலுத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று ஒரு கப்பலில் 37,000 மெற்றிக் தொன் எரிவாயு நாட்டை வந்தடையுமெனவும், நாளைய தினம் மேலும் ஒரு கப்பல் வந்தடையுமெனவும் லிற்றோ நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.

நாளைய தினம் சமையல் எரிவாயு விநியோகம் ஆரம்பிக்குமெனவும் மேலும் தலைவர் தெரிவித்துள்ளார்.

சமையல் எரிவாயு வழமைக்கு திரும்புகிறது

Social Share

Leave a Reply