இன்று நாட்டின் பல பகுதிகளில் கடும் காற்றுடன் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. தென் மேல் பருவப்பெயர்ச்சி மழை நாட்டில் குடிகொண்டுள்ளதனால் இந்த மழைவீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, வட மேல், தென் மாகாணங்களில் அதிக மழை வீழ்ச்சி ஏற்படுமெனவும், வட மாகாணத்திலும் அனுராத புரத்திலும் சராசரியான மழை பெய்யுமெனவும் கூறப்பட்டுள்ளது.
சப்ரகமுவ மாகாணத்திலும், கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் 50 mm இற்கும் அதிகமான மழை வீழ்ச்சி ஏற்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மலை நாட்டிலும், வடக்கு, வட மத்திய மாகாணத்திலும், ஹம்பாந்தோட்டை, திருகோணமலை பகுதிகளில் மணிக்கு 40 தொடக்கம் 50 கிலோமீற்றர் வரையிலான வேகத்தில் காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் இந்த வாநிலைக்கு ஏற்ற முன் ஆயத்தங்களை செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
வாகன ஓட்டுனர்கள் அவதானமாக வாகனங்களை செலுத்தி விபத்துகளை தவிர்த்து கொள்ளுங்கள்.