இலங்கைக்கான இந்திய மக்களின் பல கோடி உதவிகள்
இந்திய மக்களின் இலங்கைக்கான மனிதாபிமான உதவிகள் இலங்கையை வந்தடைய ஆரம்பித்துள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. அதன் முதற் கட்டமாக 16 மில்லியனுக்கான உதவிகள் இலங்கையை வந்தடைந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் 2000 கோடி இலங்கை ரூபாய் பெறுமதியுடைய மிகப் பெரிய உதவி பொருட்களை ஏற்றிவரும் கப்பல் இலங்கையை வந்தடையவுள்ளது. இதில் 9000 மெற்றிக் தொன் அரிசி, 50 மெற்றிக் தொன் பால் மா, 25 மெற்றிக் தொன் மருந்துகள் மற்றும் மருத்துவ பொருட்கள் இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே, இலங்கை உயர் அதிகாரிகளிடம் கையளிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பெறுமதிப்படி 5500 கோடி ரூபாய் பொருட்களை தாங்கிய தமிழ் நாட்டு கப்பல் 40,000 மெற்றிக் தொன் அரிசி, 500 மெற்றிக் தொன் பால் மா மற்றும் மருந்து பொருட்கள் அடங்கலாக மேலும் பல பொருட்களுடன் முதலில் இலங்கையை வந்தடையுமென இந்திய உயர் ஸ்தானிகரலாயம் மேலும் தெரிவித்துள்ளது. கடந்த 18 ஆம் திகதி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கொடியசைத்து கப்பல் பயணத்தை துவக்கி வைத்திருந்தார்.
இந்தியாவினால் வழங்கப்படும் இந்த பொருட்கள் வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் மேல் மாகாணங்கள்
அடங்கலாக இலங்கை முழுவதும், இலங்கை அரசாங்கத்தினூடாக பலதரப்பட்ட மக்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மக்களின் பங்களிப்புடன் இந்த பொருட்கள் இலங்கை அனுப்பட்டுள்ளன. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல் நிலைக்கு கைகொடுக்கும் முகமாக இத்தியா பல உதவி திட்டங்களை தனியார் மற்றும் சமூக சேவை அமைப்புகளோடு இணைந்து தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. பொருளாதார உதவிகளை தவிர்த்து 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான உதவிகள் ஜனவரி முதல் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன. அத்தோடு இந்திய அரசாங்கத்தினால் மானிய அடிப்படையில் உலர் உணவுப் பொருட்கள், மருந்து பொருட்கள் அடங்கலாக மேலும் பல பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.