முன்நாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணைக்கு சென்றிருந்தார். கடந்த மே 09 ஆம் திகதி போராட்ட காரர்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளுக்காவே அவர் அழைக்கப்பட்டிருந்தார்.
இவ்வாறான சூழ்நிலையில் இன்று பிற்பகல் வேளையில் அவரை கைது செய்யுமாறு கோரி அண்மைய போராட்டங்களில் ஈடுபட்டு வரும் இளைஞர் குழு குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னதாக போராட்டத்தில் களமிறங்கியது.
எவ்வாறாயினும், மாலை வேளையில் விசாரணைகளை நிறைவு செய்துகொண்டு ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார். 4 1/2 மணி நேரமளவில் விசாரணை நடைபெற்றுள்ளது.
