கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் பாடகர்களான யொஹானி மற்றும் சதீஸன் இணைந்து பாடியிருந்த மெனிக்கே மஹே ஹித்தே பாடல் யூரியுபில் 117 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து உலகளவில் பிரபலமாகியுள்ளது.
இப்பாடலைப் பாடிய பாடகி யொஹானியை இலங்கைக்கான இந்தியத்தூதரகம் இலங்கை இந்திய கலாசார தூதுவராக நியமித்துள்ளது.
இந்தியாவின் சினித்துறை பிரபலங்களான அமிதாப்பச்சன், பிரியங்கா சோப்ரா மற்றும் பலரைக் கவர்ந்த இப் பாடல் இந்தியாவின் பட்டித் தொட்டியெங்கும் ஒலிப்பதாகவும் அண்மையில் இந்தியாவின் முன்னணித் தொலைக்காட்சிகளில் ஒன்றான என் டி தொலைக்காட்சிப் பேட்டியின் போது தெரிவிக்கப்பட்டது.
மேலும் இது தொடர்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகம் இப்பாடல் இலங்கை இந்திய கலாசார பாரம்பரியங்களுக்கான மீள்வருகையாக அமைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
