ராஜேந்தர் அவசர சிகிச்சைக்காக வெளிநாடு பயணம்

இயக்குனரும், நடிகருமான T.ராஜேந்தர் நெஞ்சுவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். வைத்திய பரிசோதனைகளில் அவருக்கு வயிற்றில் இரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலதிக உயர் சிகிச்சைகள் தேவைப்படுவதனால் அவரை வெளிநாட்டுக்கு அழைத்து செல்வதாக அவரின் மகன் சிலம்பரசன் அறிவித்துள்ளார். மேலும் அவர் சுய நினைவுடன் இருப்பதாகவும், கூடிய விரைவில் சிகிச்சைகளை நிறைவு செய்து உங்களை சந்திப்பார் எனவும் சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இலங்கையின் பொருளாதார, அரசியல் சிக்கல் நிலை தொடர்பில் இலங்கை இசையமைப்பாளர் ஷமீலின் இசையில் பாடல் ஒன்றையும் பாடியிருந்தார்.

மே மாதம் 09 ஆம் திகதி ராஜேந்தர் தன்னுடைய 67 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடியிருந்தார்.

ராஜேந்தர் அவசர சிகிச்சைக்காக வெளிநாடு பயணம்

Social Share

Leave a Reply