அத்தியாவசிய ஊழியர்களை மட்டும் நாளை (26.05) முதல் மறு அறிவித்தல் வரை வேலைக்கு அழைக்குமாறு அமைச்சின் செயலாளர்கள், மாகாணசபைகளின் பிரதம செயலாளர்கள், மற்றும் திணைக்கள தலைவர்களுக்கு பொதுசேவைகள் மற்றும் உள்நாட்டு விவகார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
அரச ஊழியர்கள் போக்குவரத்து சிக்கல் நிலைகளை எதிகொள்வதனால் பலரின் வேண்டுகோளுற்கிணங்க இந்த முடிவினை எடுத்துள்ளதாக பொதுசேவைகள் மற்றும் உள்நாட்டு விவகார அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ள சுற்று நிரூபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழியர்களை வேலைக்கு அழைப்பதற்கான திட்டங்களை உருவாக்குமாறும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு எரிபொருள், மின்சாரம், நீர் பாவனைகளை மட்டுப்படுத்துமாறு மேலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
