இந்தியா அரசாங்கம் இலங்கைக்கு வழங்கும் மருத்துவ உதவி பொருட்களை இன்று சுகாதர துறை அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெலவிடம், இலங்கைக்கான இந்திய உதவி உயர் ஸ்தானிகர் வினோத் ஜகோப் துறைமுகத்தில் வைத்து கையளித்தார்.
260 மில்லியன் இலங்கை ரூபா பெறுமதியுடைய 25 தொன்னுக்கும் அதிகமான மருத்துவ பொருட்கள் இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளன. இந்திய கடற்படை கப்பல் மூலமாக இந்த மருத்துவ பொருட்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
இந்த மருந்து பொருட்களுடன், மீனவ படகுகளுக்கான மண்ணெண்ணையும் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவை பயனாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுமெனவும் இந்திய உயர் ஸ்தானிகரலாயம் அறிவித்துள்ளது.
